Monday, March 2, 2020

உங்கள் நட்சத்திர கோயில் எது ?

உங்கள் நட்சத்திர கோயிலுக்கு சென்று அபிஷேக அர்ச்சனைகள் செய்து அளப்பரிய நலன்களை பெறுங்கள் .

ஆசிகள், ஓம் நமசிவய .



எண்
நட்சத்திரம்
கோயில்
1
அசுவினி
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்
2
பரணி
நல்லாடை அக்னீஸ்வரர் கோயில்
3
கார்த்திகை
கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர் கோயில்
4
ரோகிணி
காஞ்சிபுரம் பாண்டவதூதப்பெருமாள் கோயில்
5
மிருகசீரிடம்
எண்கண் ஆதிநாராயணப்பெருமாள் கோயில்
6
திருவாதிரை
அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் கோயில்
7
புனர்பூசம்
வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில்
8
பூசம்
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்
9
ஆயில்யம்
திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்
10
மகம்
விராலிப்பட்டி மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
11
பூரம்
திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் கோயில்
12
உத்திரம்
இடையாற்று மங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோயில்
13
அஸ்தம்
கோமல் கிருபாகூபாரேச்வரர் கோயில்
14
சித்திரை
குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் கோயில்
15
சுவாதி
சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில்
16
விசாகம்
பண்பொழி முத்துக்குமாரசுவாமி கோயில்
17
அனுஷம்
திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில்
18
கேட்டை
பசுபதிகோவில் வரதராஜப்பெருமாள் கோயில்
19
மூலம்
மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்
20
பூராடம்
கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்
21
உத்திராடம்
கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
22
திருவோணம்
திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்
23
அவிட்டம்
கீழக் கொருக்கை பிரம்மஞான புரீஸ்வரர் கோயில்
24
சதயம்
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
25
பூரட்டாதி
ரங்கநாதபுரம் திருவானேஷ்வர் கோயில்
26
உத்திரட்டாதி
தீயத்தூர் சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோயில்
27
ரேவதி
காருகுடி கைலாசநாதர் கோயில்

Friday, July 31, 2015

மந்தர ஜபம்

ஓம் நமசிவய.
அன்பிற்குரியவர்களே,
மந்த்ரங்களை உச்சரிக்கும் போது இந்த மந்த்ரம் இத்தனை முறைகள் சொல்லவேண்டும் என்று கணக்கிடாதீர்கள் ,
மேலும்,

ஒருமணி நேரத்தில் இந்த மந்த்ரம் முடிக்கவேண்டும் முடித்தபின் அந்த மந்தரம் சொல்லவேண்டும் என்பது போன்ற கணக்கீடுகளுக்கு உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.
மந்திர உச்சாடனத்தை (பயிற்சியை) குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முடிக்கவேண்டுமே என அவசரப்படாதீர்கள் .
மஹா காயத்ரியின் எண்ணிக்கை 24 ஆகும்.
நீங்கள் சொல்வது (காயத்ரி, மூலமந்திரம், மாலா மந்த்ரம் , த்ரிசதி என )எந்த மந்திரமாக இருந்தாலும் அதனை ஸ்ருதி சுத்தமாக, நிதானமாக , நிறுத்தி , பொறுமையுடன், மந்த்ரத்தினுள் ஆழ்ந்து , மந்த்ரத்தை அனுபவித்து , பொருள் உணர்ந்து , புல்லரிப்புடன் அதன் தன்மை மாறாமல் 24 முறைகள் உச்சரித்தால் போதும்.
பிரபஞ்சம் எங்கும் வியாபித்துள்ள மந்த்ரங்கள் உங்களுள் பிரவாகமாக பாய்ந்து அருள்நிலையைத் தந்து
நீங்கள் சொல்லும் மந்த்ரத்திற்கு பூரண பலன்களைத் தரும்.
ஆனால்,
அவசர கதியில் வேகமான நடையில் மந்த்ரதினை மனப்பாடம் போல ஒப்பிப்பதால் எத்தனை இலட்சம் சொன்னாலும் எந்த பலனும் ஏற்படாது.
உங்கள் நன்மைக்காக நீங்கள் சொல்லுகின்ற மந்த்ரத்தில் ஏன் பதட்டம், அவசரம்.
பொறுமையாக நிறுத்தி ஆற அமர மந்தரங்களை சொல்லி ஜெயம் பெற வாழ்த்துக்கள்.
ஓம் நமசிவய.

Saturday, July 21, 2012

அன்பு உள்ளங்களே, அனைவருக்கும் வணக்கம்.


ஆன்ம வெளிப்பாடாக உள்ள பல விஷயங்களைப் பகிர்தல்  என்பது 
மேலும் பல விஷயங்களை அறியத் தரும் என்பதால் அடியேனின் சிறிய அறிதலை வெளிப்படுத்த இந்த வலைப்பூவை உருவாக்கி உள்ளேன் .


இதனுடன்  உங்களுடைய ஆன்ம அறிதலையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் , 


உங்களின் ஆன்மாவுடன் பயணிக்க விரும்பும் அடியவன்.